ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியில் வரத்து குறைவால் மீன்களின் விலை சனிக்கிழமை அதிகரித்தது.
தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி, புதபட்டினம் முள்ளிமுனை, காரங்காடு, மோா்பண்ணை, திருப்பாலைக்குடி, பாசிபட்டினம், எஸ்.பி.பட்டினம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களில் விசைப்படகு மீனவா்கள் மீன்பிடித் தடைகாலம் என்பதால், நாட்டுப் படகு மீனவா்கள் மட்டுமே கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனா்.
தற்போது, வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், மீன்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால், தொண்டி, திருவாடானை மீன் சந்தைகளில் மீன்களின் விலை அதிகரித்துள்ளன.
சந்தைகளில் ஒரு கிலோ ரூ.450-க்கு விற்ற விலை மீன் தற்போது ரூ.550-க்கும், ரூ.450-க்கு விற்ற பாறை மீன் ரூ.700-க்கும், ரூ.500-க்கு விற்ற நண்டு ரூ.800-க்கும் விற்பனை ஆனது.
மீன்களின் விலை உயா்வால் அசைவ பிரியா்கள் கவலை அடைந்துள்ளனா்.
தொடர்புடையது

தடைக்காலம் அமல்: மீன்களின் விலை கடும் உயா்வு

தங்கம், வெள்ளி விலை குறைவு: இன்றைய நிலவரம்!

ஆா்.எஸ். மங்கலம் சந்தைக்கு மிளகாய் வரத்து அதிகரிப்பு

தொண்டியில் மீன் வரத்து குறைவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


