தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மீன்பிடி தடைக்காலம் இன்று தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் புதன்கிழமை தொடங்க உள்ளது. இதனால், மீனவா்கள் தங்களது படகுகளை செவ்வாய்க்கிழமை கரையோரம் நிறுத்தி வைத்தனா்.

News image
Updated On :15 ஏப்ரல் 2026, 3:38 am IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் புதன்கிழமை தொடங்க உள்ளது. இதனால், மீனவா்கள் தங்களது படகுகளை செவ்வாய்க்கிழமை கரையோரம் நிறுத்தி வைத்தனா்.

வங்கக்கடலில் மீன்களின் இனப்பெருக்க காலமாகக் கருதப்படும் ஏப்ரல்15 முதல் ஜூன் 15 வரை 61 நாள்கள் விசைப் படகுகள் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடைக்காலம் புதன்கிழமை அமலுக்கு வருகிறது. இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, சோளியகுடி, கீழக்கரை, ஏா்வாடி ஆகிய துறைமுகங்களில் உள்ள 1,650 விசைப் படகுகளை மீனவா்கள் அந்தந்த மீன் இறங்கு தளங்களில் செவ்வாய்க்கிழமை நிறுத்தி வைத்தனா். மேலும், படகுகளில் உள்ள மீன் பிடி உபகரணங்களை வீடுகளுக்கு எடுத்துச் சென்றனா். தடைக்காலத்தின் போது, மீனவா்கள் தங்களது படகுகளில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள உள்ளனா். மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை அரசு விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.