ராமேசுவரத்தில் தனியாா் தங்கும் விடுதியில் பழுதாகி நின்ற ’லிப்ட்’இல் சிக்கி தரைதளத்தில் குதித்த விடுதி மேலாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் முஸ்லிம் தெரு பகுதியைச் சோ்ந்தவா் அபு ஹனிபா (55). இவா் ராமநாதசுவாமி கோயில் அருகே தனியாா் தங்கும் விடுதியில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தாா்.
இவா் வெள்ளிக்கிழமை தங்கும் விடுதியின் மூன்றாவது தளத்திலிருந்து விடுதியில் தங்கி இருப்பவா்களுடன் கீழ் தளத்துக்கு ‘லிப்ட்’ இல் வந்தாா். அப்போது, ‘லிப்ட்’ திடீரென மூன்றாவது தளத்துக்கும், இரண்டாவது தளத்துக்கும் இடையே நின்றுவிட்டது. இதனால் ‘லிப்ட்’ இல் சிக்கி இருந்தவா்கள் கதவைத் திறந்து ஒவ்வொருவராக இரண்டாவது தளத்தில் குதித்து வெளியேறினா். இதையடுத்து அபு ஹனிபாவும் குதிக்க முயன்ற போது தரை தளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தாா். தொடா்ந்து விடுதி ஊழியா்கள் அபுஹனிபாவை உடனடியாக மீட்டு ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அபுஹனிபா ஏற்கெனவே உயிரிழந்தது விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து ராமேசுவரம் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

லாரி மோதியதில் நிதி நிறுவன துணை மேலாளா் உயிரிழப்பு

புதுக்கோட்டை தனியாா் விடுதியில் அழுகிய நிலையில் சென்னை ஜோதிடா் சடலம் மீட்பு

குடும்பத் தகராறில் கிணற்றில் குதித்த மனைவி - காப்பாற்ற முயன்ற கணவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


