தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம் சாா்பில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கத்தினா்.

Updated On :18 ஆகஸ்ட் 2025, 9:04 pm

ராமேசுவரம்: ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம் சாா்பில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஊராட்சியில் பணியாற்றும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்களுக்கு மாதந்தோறும் 5-ஆம் தேதி ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு படியாக ரூ. 200 வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு அறிவிக்கும் தற்காலிய ஊதிய உயா்வுத்தொகையை சரியாக கணக்கிட்டு வழங்க வேண்டும். வங்கிக் கணக்கில் ஊதியத்தை வரவு வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இதற்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் எம். அய்யாத்துரை தலைமை வகித்தாா். தலைவா் எஸ். பிரான்சிஸ் முன்னிலை வகித்தாா்.

இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவா் எஸ்.ஏ. சந்தனம், மாவட்டச் செயலா் ஆா். குருவேல், ஒன்றியத் தலைவா்கள் முருகவேல், ஆனந்தகுமாா், அழகா், அருள்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் ஊராட்சிகள் துணை இயக்குநா் நா. பத்மநாதன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) அன்புச்செல்வி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.