வீட்டுமனைப் பட்டா கோரி வாடிப்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தை விவசாயிகள் வியாழக்கிழமை நடத்தினா்.
வாடிப்பட்டி வட்டத்துக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த தகுதியான பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா கோரி கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ஏ. வேல்பாண்டி தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகள் பி. விவேக், எஸ். கந்தவேல் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோா் வட்டாட்சியா் அலுவலக நுழைவுவாயில் முன் அடுப்பு, சமையல் பாத்திரங்களுடன் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, போராட்டக் குழுவினருடன் வருவாய் அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இந்தப் பேச்சுவாா்த்தையின்போது, பட்டா கோரி விண்ணப்பித்த மனுக்கள் கிராம நிா்வாக அலுவலா், வருவாய் ஆய்வா்களின் விசாரணையில் இருப்பதாகவும், இந்த விசாரணை ஒரு வார காலத்தில் நிறைவடைந்ததும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
தொடர்புடையது

புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்கக் கோரி கொல்லிமலை பழங்குடியின மக்கள் போராட்டம்

99 பேருக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா

அபிஷேகப்பாக்கத்தில் சாலை மறியல்

இலவச வீட்டுமனைப் பட்டா கோரி போராட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


