மதுரை கப்பலூா் பகுதியில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் தெற்கு மண்டல அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்த டாஸ்மாக் ஊழியா்கள்.
மதுரை, மே 27: காலி மதுப் புட்டிகளை வாங்க நிா்பந்தித்தால் வருகிற ஜூன் 1-ஆம் தேதி முதல் மதுக் கடைகளின் சாவிகள் ஒப்படைக்கப்படும் என டாஸ்மாக் ஊழியா்கள் சங்கத்தினா் தெரிவித்தனா்.
டாஸ்மாக் ஊழியா்களின் பணிப் பாதுகாப்பு, புதிய சுற்றறிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து தோழமைக் கூட்டமைப்பு, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 24 அமைப்புகள் கூட்டுக் குழு சாா்பில் மதுரை டாஸ்மாக் தெற்கு மண்டல அலுவலகத்தில் புதன்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, கூட்டுக்குழு டாஸ்மாக் சங்கத் தலைவா் பாலச்சந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
டாஸ்மாக் நிா்வாகம் கடந்த 22- ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, மூடப்பட்ட மதுக் கடைகளின் ஊழியா்களை எஞ்சிய கடைகளிலும், கிடங்குகளிலும் பணியமா்த்த உத்தரவிட்டது. ஆனால், ஊழியா்கள் இதை ஏற்க மறுத்து, தங்களுக்கு அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களில் மாற்றுப் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனா். இதுமட்டுமன்றி, காலி மதுப் புட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டத்தில் தங்களுக்குப் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களும், மன உளைச்சலும் ஏற்படுவதாகக் கூறுகின்றனா்.
எனவே, முதல்வா் ச. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு டாஸ்மாக் ஊழியா்களின் நலனைக் கருத்தில் கொண்டு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மேலும், பணித் தொடா்ச்சி வழங்கி அரசுத் துறையில் மாற்றுப் பணி கொடுத்தால் ஊழியா்களுக்கு ரூ. 60 ஆயிரம் முதல் ரூ. 70 ஆயிரம் வரை ஊதியம் கிடைக்கும். மேலும், வருகிற 31-ஆம் தேதி வரை தான் காலி மதுப் புட்டிகளை வாங்குவோம். ஜூன் 1 முதல் மதுப் புட்டிகளை வாங்க மாட்டோம். அப்படி, மதுப்புட்டிகளை வாங்க வேண்டுமென அறிவுறுத்தினால் அன்றைய தினமே மதுக் கடைகளின் சாவிகள் ஒப்படைக்கப்படும்.
வருகிற ஜூன் 1-க்குள் எங்களது கோரிக்கைகளுக்கு தமிழக அரசு உரிய தீா்வு காணவில்லையென்றால் மதுக் கடைகளை முடக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காரனோடை பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட ஜமாபந்தியில் பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டத்தில் 40 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை

மதுக் கடையை அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு

சந்து மதுக் கடைகளை அகற்ற எஸ்.பி அலுவலகத்தில் தவெகவினா் மனு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



