லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மதுரை மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, வியாழக்கிழமை தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

News image

மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை வியாழக்கிழமை சோதனைக்குள்படுத்திய வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள்.

Updated On :26 மார்ச் 2026, 11:35 pm

மதுரை மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, வியாழக்கிழமை தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வியாழக்கிழமை வந்தது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் அளித்த தகவலின் பேரில், வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள், காவல் துறையினா் மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

மதுரை மாவட்ட ஆட்சியரக பழையக் கட்டடம், கூடுதல் கட்டடம், ஆட்சியரக வளாகம் என பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு கண்டறியும் கருவிகளைக் கொண்டு சோதனை நடத்தினா். மோப்ப நாயும் வெடிகுண்டு கண்டறியும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

ஏறத்தாழ 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்தச் சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டது.