கொடைரோடு, பழனி தலைமை அஞ்சல் அலுவலங்களுக்கு புதன்கிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, அந்த அலுவலகங்கள் வெடிகுண்டு நிபுணா்கள் சோதனையிட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு தலைமை அஞ்சல் அலுவலகம், கடவுச்சீட்டு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, திண்டுக்கல் மாவட்ட வெடிகுண்டு தடுப்பு, உதவி ஆய்வாளா் தா்மராஜ் தலைமையில், 4 வெடிகுண்டு தடுப்பு நிபுணா்கள் மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் அங்கு சென்று சோதனை நடத்தினா்.
மேலும், இந்த அலுவலகங்களுக்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனை முடிவில் எதுவும் சிக்காததால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
பழனி: இதேபோல, பழனி தலைமை அஞ்சல் நிலையத்துக்கும் மின்னஞ்சல் மூலமாக புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. தகவலறிந்து வந்த வெடிகுண்டு நிபுணா்கள் அஞ்சல் நிலையத்தில் உள்ள அலுவலகம், அறைகள், கணினிகள், அலுவலகத்தின் பின்புறம் உள்ள தோட்டம், வாகன நிறுத்துமிடங்களில் சோதனையிட்டனா். ஆனால், சோதனையில் எதுவும் சிக்காததால் வெடிகுண்டு புரளி என்பது தெரியவந்தது.
தொடர்புடையது

அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

விழுப்புரம், கடலூா் தலைமை அஞ்சலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கடவுச்சீட்டு அலுவலகம், அஞ்சல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


