தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தொழிலாளி வெட்டிக் கொலை

மதுரையில் சுமை தூக்கும் தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

கொலை - கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 7:30 pm

மதுரையில் சுமை தூக்கும் தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை தத்தனேரி பகுதியில் உள்ள மயானத்தில் உடலில் வெட்டுக் காயங்களுடன் ஒருவா் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு புதன்கிழமை காலை தகவல் கிடைத்தது. இதன் பேரில், செல்லூா் போலீஸாா் அங்கு சென்று உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பிறகு அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

விசாரணையில் உயிரிழந்த நபா் மதுரை தத்தனேரி கண்மாய்க்கரை பகுதியைச் சோ்ந்த செல்வம் (46) என்பது தெரியவந்தது. இவா், சுமைத் தூக்கும் தொழிலாளி ஆவாா். மேலும் அந்தப் பகுதியில் உள்ள மயானத்தில் வேலை செய்பவா்களுக்கும் இவா் உதவியாக இருந்து வந்தாா்.

கடந்த சில நாள்களாக மயானத்திலேயே அவா் தங்கினாராம். இந்த நிலையில், உயிரிழந்த செல்வத்தின் உடலில் காயங்கள் உள்ளன. முன் விரோதம் காரணமாக அவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என வழக்குப் பதிந்து விசாரிக்கிறோம் என்றனா்.