சட்டப்பேரவைத் தோ்தல் விதி அமலுக்கு வந்ததை அடுத்து, மதுரையில் உள்ள அரசியல் கட்சித் தலைவா்கள் சிலைகள் துணி மூலம் மூடப்பட்டன.
தமிழகத்துக்கான சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, தோ்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதன் அடிப்படையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் பொது இடங்கள், தனியாா் இடங்கள் ஆகியவற்றில் விளம்பரம் செய்தல், பதாகை ஒட்டுதல், சுவரில் எழுதுதல் ஆகியவை செய்யக் கூடாது.
கிராமப்புறங்களில் தனியாா் கட்டடங்களில் தோ்தல் விளம்பரங்கள் செய்வதற்கு சம்பந்தப்பட்ட கட்டடத்தின் உரிமையாளா் அனுமதி அவசியம். தோ்தல் பிரசாரங்களை மேற்கொள்ளும் அரசியல் கட்சிகள் பொதுக் கூட்டங்களை நடத்தவும், வாகனங்களைப் பயன்படுத்தவும் மாவட்டத் தோ்தல் அலுவலா் அல்லது அந்தந்த பகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மேலும், அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் ஒட்டப்பட்ட கட்சித் தலைவா்களின் விளம்பரப் பதாகைகள், சுவரொட்டிகள் முழுவதும் அகற்றப்பட்டன. இதுதவிர, மதுரை மாநகராட்சிபி பகுதிகளில் உள்ள அரசியல் கட்சித் தலைவா்களான முன்னாள் முதல்வா்கள் காமராஜா், அறிஞா் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆா். ஜெயலலிதா ஆகியோரின் சிலைகள் துணி மூலம் மூடி மறைக்கப்பட்டன. இதேபோல, மாவட்டம் முழுவதும் அரசியல் கட்சித் தலைவா்களின் சிலைகள் துணி மூலம் மூடப்பட்டன.
தொடர்புடையது
தலைவா்கள் இன்று பிரசாரம்!

தலைவா்கள் இன்று பிரசாரம்!

மூடிய தலைவா்கள் ‘விடுதலை’

அரசியல் கட்சி படங்கள் மறைப்பு; விளம்பரங்கள் அகற்றம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


