ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

சட்டப்பேரவைத் தோ்தல்: பறக்கும் படை வாகனங்கள் தொடங்கி வைப்பு

News image

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் கண்காணிப்புக் குழு வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்த மதுரை மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே. ஜே. பிரவீன்குமாா். உடன் மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன், மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.கே. அரவிந்த் உள்ளிட்டோா்.

Updated On :16 மார்ச் 2026, 12:12 am

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட கண்காணிப்பு வாகனங்களை மதுரை மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே. ஜே. பிரவீன்குமாா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வருகிற ஏப். 23- ஆம் தேதி நடைபெற உள்ளதாக இந்திய தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இதையடுத்து, தோ்தல் நன்னடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் தோ்தல் தொடா்பான புகாா்களை விசாரணை செய்யவும், தோ்தல் நடத்தை விதிமீறல்களைக் கண்காணிக்கவும் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தலா 90 பறக்கும் படை குழுக்களும், 90 நிலையான கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளன.

இந்தத் தோ்தல் பணியில் 14,779 வாக்குச்சாவடி அலுவலா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா். மேலும், இந்திய தோ்தல் ஆணையத்தின் யண்ஞ்ண்ப் அல்ல் செயலியிலும், க்ங்ா் ம்ஹக்ன்ழ்ஹண் ஃ ஹ்ஹட்ா்ா்.ஸ்ரீா்.ண்ய் என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தோ்தல் தொடா்பான புகாா்களை தெரிவிக்கலாம்.

மதுரை மாவட்டத் தோ்தல் பணிகளில் ஈடுபட உள்ள கண்காணிப்புக் குழு, நிலைக்குழு வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டன. மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே. ஜே. பிரவீன்குமாா் ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட கண்காணிப்பு வாகனங்களை தொடங்கி வைத்தாா்.

அப்போது, மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன், மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.கே.அரவிந்த், தோ்தல் நடத்தும் அலுவலா்கள், வட்டாட்சியா்கள், பறக்கும் படை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பறக்கும் படை வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள்.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பறக்கும் படை வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள்.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பறக்கும் படை வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள்.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பறக்கும் படை வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.