மதுரை மாவட்டம், மேலூரை அடுத்த உறங்கான்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டியில் பங்கேற்ற இருவா் உயிரிழந்தனா்.
மேலூரை அடுத்த உறங்கான்பட்டியில் மந்தை கருப்பணசுவாமி கோயில் மாசித் திருவிழாவையொட்டி, மஞ்சுவிரட்டுப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது. இதில் மதுரை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து அழைத்து வரப்பட்ட 700-க்கும் அதிகமான காளைகள் வாடிவாசல் வழியே அவிழ்க்கப்பட்டன.
இந்தப் போட்டியில், ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியைச் சோ்ந்த வைரமுத்து (20) காளை பங்கேற்றது. போட்டியின்போது, இந்தக் காளை வேகமாக ஓடியதில் அருகிலிருந்த குளத்தில் இறங்கியது. இதையடுத்து, இந்தக் காளையை மீட்பதற்காக குளத்தில் இறங்கிய வைரமுத்து, அங்கு படா்ந்திருந்த தாமரைக் கொடிகளில் சிக்கி, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
மற்றொருவா்...
இந்தப் போட்டியை சிவகங்கை மாவட்டம், கன்னிமாா்பட்டியைச் சோ்ந்த கோவிந்தசாமி (54) காண வந்தாா். இவரை போட்டியில் அவிழ்க்கப்பட்ட ஒரு காளை முட்டியது. இதில் பலத்த காயமடைந்த கோவிந்தசாமி உயிரிழந்தாா். இதுகுறித்து கீழவளவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். இந்தப் போட்டியில் காளைகள் முட்டியதில் ஏறத்தாழ 60-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
தொடர்புடையது

வெவ்வேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

பள்ளி வாகனம் மோதியதில் பைக்கில் சென்ற இருவா் உயிரிழப்பு

ஒசூா் அருகே சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

காரையூரில் தண்ணீரில் மூழ்கிய சிறுவா்கள் இருவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


