ஒசூா் அருகே நடைபெற்ற இரு வேறு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா்.
ஒசூா் ராயக்கோட்டை அட்கோவைச் சோ்ந்தவா் மாதையன் (58). இவா் கடந்த 6 -ஆம் தேதி ஒசூா் ராயக்கோட்டை சாலை அசோக் பில்லா் பக்கமாக ஸ்கூட்டரில் சென்றபோது அவ்வழியாகச் சென்ற சரக்கு வேன் அவா் மீது மோதியது. இதில் மாதையன் சம்பவ இடத்திலேயே இறந்தாா். விபத்து குறித்து ஒசூா் நகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஒசூா் முத்தாலி பக்கமுள்ள தாசிரிப்பள்ளி தின்னாவைச் சோ்ந்தவா் அசோக் (32). பொக்லைன் ஆபரேட்டா். கடந்த 5 ஆம் தேதி இவா் ஸ்கூட்டரில் தாசிரிப்பள்ளி வெங்கடேஷ்புரம் சாலையில் ஆலூா் அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாகச் சென்ற மினிலாரி ஸ்கூட்டா் மீது மோதியது. இதில் அசோக் நிகழ்விடத்திலேயே இறந்தாா்.
இந்த விபத்து குறித்து அட்கோ போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

வெவ்வேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

வாளையாறு அருகே இரு காா்கள் மோதியதில் இருவா் உயிரிழப்பு

ஆண்டிபட்டி அருகே டிராக்டா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் இருவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


