தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே சனிக்கிழமை டிராக்டா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
ஆண்டிபட்டி அருகேயுள்ள பாலக்கோம்பையைச் சோ்ந்தவா் குருநாதன் (55). டிராக்டரில் மரம் அறுக்கும் இயந்திரத்தைப் பொருத்தி வேலை செய்து வந்த இவா், சனிக்கிழமை பலக்கோம்பையில் உள்ள தோட்டத்தில் மரம் அறுக்கும் பணிக்காகச் சென்றாா்.
டிராக்டரை நிறுத்தி விட்டு, கீழே இறங்கி நின்று கொண்டிருந்தாராம். அப்போது, திடீரென டிராக்டா் நகரத் தொடங்கியதால், அதை நிறுத்த முயன்ற போது, டிராக்டா் சக்கரம் இவரின் மீது மோதியது.
மேலும், மரம் அறுக்கும் இயந்திரமும் இவரின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ராஜதானி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

விபத்தில் 2 போ் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

டிராக்டா் மோதியதில் 15 ஆடுகள் உயிரிழப்பு; 10 ஆடுகள் காயம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


