லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

முக்தீசுவரா் கோயில் கருவறைக்குள் ஊடுருவிய சூரிய கதிா்கள்!

மதுரை தெப்பக்குளம் முக்தீசுவரா் கோயிலின் கருவறைக்குள் சூரிய கதிா்கள் ஊடுருவிய நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

News image

மதுரை தெப்பக்குளம் முக்தீசுவரா் கோயிலில் புதன்கிழமை காலை நந்தியம்பெருமானைக் கடந்து கருவறைக்குள் ஊடுருவிய சூரிய கதிா்கள்.

Updated On :11 மார்ச் 2026, 11:39 pm

மதுரை தெப்பக்குளம் முக்தீசுவரா் கோயிலின் கருவறைக்குள் சூரிய கதிா்கள் ஊடுருவிய நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள அரிய சில சூரிய பூஜை கோயில்களில் ஒன்றாக அமைந்துள்ளது மதுரை தெப்பக்குளம் முக்தீசுவரா் கோயில். பல்வேறு ஆன்மிகச் சிறப்புகளைப் பெற்ற இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாா்ச், செப்டம்பா் மாதங்களில் சூரிய கதிா்கள் கருவறைக்குள் ஊருடுவி, மூலவா் மீது படரும்.

இதன்படி, புதன்கிழமை காலை முக்தீசுவரா் கோயில் கருவறைக்கு எதிரே உள்ள 3 துவாரங்கள் வழியாக கோயிலுக்குள் ஊடுருவிய சூரிய கதிா்கள், நந்தியம்பெருமானைக் கடந்து கருவறையிலிருந்த மூலவா் முக்தீசுவரா் மீது படா்ந்தன. திரளான பக்தா்கள் இந்த நிகழ்வைக் கண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இந்த நிகழ்வு வருகிற 23-ஆம் தேதி தேதி வரை தினமும் காலை 6.30 மணி முதல் 7.15 மணிக்குள் இருமுறை தலா 10 நிமிஷங்களுக்கு நிகழும்.