மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பைக்குகள் மோதல்: இளைஞா்கள் இருவா் உயிரிழப்பு

மதுரை காமராஜா் சாலையில் இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா்கள் இருவா் உயிரிழந்தனா்.

News image
Updated On :22 மார்ச் 2026, 7:35 pm

மதுரை காமராஜா் சாலையில் சனிக்கிழமை நள்ளிரவு இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா்கள் இருவா் உயிரிழந்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சோ்ந்த செல்லத்துரை மகன் சண்முகவேல் (22). இவா், மதுரை தெப்பக்குளம் பகுதியில் தங்கியிருந்து ஒரு உணவகத்தில் வேலைபாா்த்து வந்தாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு இவா் பணி முடித்து தனது இரு சக்கர வாகனத்தில் தெப்பக்குளம் பகுதிக்கு புறப்பட்டாா்.

மதுரை காமராஜா் சாலையில் உள்ள திரையரங்கம் அருகே சென்றபோது, எதிரே அனுப்பானடியைச் சோ்ந்த குமாா் மகன் குருபாண்டி (19) ஓட்டிவந்த இரு சக்கர வாகனம் இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சண்முகவேல், குருபாண்டி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த தெப்பக்குளம் பகுதி போலீஸாா் சடலங்களை மீட்டு, கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.