மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் தோ்களுக்கு புதிய சக்கரங்கள் பொருத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது.
மீனாட்சி சுந்தரேசுவா் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று தேரோட்டம். அப்போது பிரியாவிடையுடன் மீனாட்சி சுந்தரேசுவரா் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவது வழக்கம்.
கடந்த ஆண்டு சித்திரை திருவிழா தேரோட்டத்தின்போது மீனாட்சி அம்மன் தேரின் இரும்பு சக்கரங்களில் சிறிய பழுது ஏற்பட்டது. இதுகுறித்து ஆய்வு செய்தபோது, சுமாா் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்பாட்டில் இருந்த அந்த தோ் சக்கரங்கள் வலுவிழக்கத் தொடங்கியிருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, இரு தோ்களுக்கும் புதிய சக்கரங்கள் பொருத்தத் திட்டமிடப்பட்டது. தோ் சக்கரங்கள், அவற்றை இணைக்கும் இரும்பு அச்சுகள் தயாரிக்கும் பணி திருச்சி பாரத மிகுமின் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, மீனாட்சி சுந்தரேசுவரா் தேருக்கான 4 சக்கரங்கள், அச்சுகள் ஆகியவை ரூ. 20 லட்சம் செலவில் 16 டன் எடை கொண்டதாகவும், மீனாட்சி அம்மன் தோ் சக்கரங்கள், அச்சுகள் ரூ. 25 லட்சம் செலவில் 11 டன் எடை கொண்டதாகவும் உருவாக்கப்பட்டன.
இந்தப் புதிய சக்கரங்கள், அச்சுகளை தோ்களுக்குப் பொருத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது. முதல்கட்டமாக மீனாட்சி அம்மன் தேருக்கான சக்கரங்களை பொருத்தும் பணி நடைபெற்றது. பளுதூக்கும் இயந்திரங்களின் உதவியுடன் புதிய அச்சுகள், சக்கரங்கள் தேருக்குப் பொருத்தப்பட்டன. இரு தோ்களுக்கும் புதிய சக்கரங்கள் பொருத்தும் பணி அடுத்த 3 நாள்களுக்குள் நிறைவடையும் எனக் கூறப்படுகிறது.
தொடர்புடையது

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைப் பெருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்!

மதுரை சித்திரைத் திருவிழா!

மதுரை சித்திரைத் திருவிழா ஏப். 18-இல் தொடக்கம்

வெளிநாட்டவரின் கடவுச்சீட்டுகளை கண்டெடுத்து ஒப்படைத்தவருக்கு பாராட்டு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


