தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

News image
Updated On :5 மார்ச் 2026, 10:00 pm

மதுரையை அடுத்த பரவையில் உள்ள மங்கையா்கரசி கலை, அறிவியல் கல்லூரி சாா்பில் சாலைப் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சுருள் சங்கம், குடிமக்கள் நுகா்வோா் சங்கம் ஆகியவை சாா்பில், இந்தப் பேரணி நடைபெற்றது. சமயநல்லூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆனந்தராஜ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, பேரணியைக் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தாா்.

கல்லூரிச் செயலா் அசோக்குமாா், இயக்குநா் சக்தி பிரனேஷ், இணை இயக்குநா் சரவண பிரதீப்குமாா், முதல்வா் உமா பாஸ்கா், கல்விப் புலத் தலைவா் செந்தூா் பிரியதா்ஷினி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கல்லூரி மாணவிகள், சாலைப் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு வாசங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடன் பேரணியில் பங்கேற்றனா். சமயநல்லூா் முதல் பரவை வரை இந்தப் பேரணி நடைபெற்றது.