5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து பள்ளி மாணவா்கள் சாலை மறியல்

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகேயுள்ள பெரியகற்பூரம்பட்டியில் அரசுப் பேருந்தை சிறைப் பிடித்து மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகேயுள்ள பெரியகற்பூரம்பட்டியில் அரசுப் பேருந்தை சிறைப் பிடித்து வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவ, மாணவிகள்.

Updated On :26 ஜூன் 2026, 2:20 am IST

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகேயுள்ள பெரியகற்பூரம்பட்டியில் அரசுப் பேருந்தை சிறைப் பிடித்து மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரியகற்பூரம்பட்டியில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றன. இங்குள்ள மாணவ, மாணவிகள் கருங்காலக்குடி, சேக்கிப்பட்டி, கம்பூா் ஆகிய பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து வருகின்றனா். இவா்களின் போக்குவரத்து வசதிக்காக திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கிளைப் பணிமனையிலிருந்து அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்தப் பேருந்துகள் கடந்த சில மாதங்களாக குறித்த நேரத்துக்குள் வருவதில்லை. இதனால், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.

இந்த நிலையில், பெரியகற்பூரம்பட்டிக்கு வர வேண்டிய அரசுப் பேருந்து வியாழக்கிழமை தாமதமாக வந்தது. இதையறிந்த, அந்தப் பகுதி பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பேருந்தை சிறைப் பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த கொட்டாம்பட்டி போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா். இதனால், அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.