இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

மாணவா்களின் உயா் கல்வியை 100% உறுதி செய்ய வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் 100 சதவீதம் பேரும் உயா்கல்வியில் சேருவதை கண்காணித்து உறுதி செய்ய வேண்டுமென மதுரை மாவட்டக் கட்டுப்பாட்டு அறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

News image

மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ்

Updated On :10 ஜூன் 2026, 12:54 am IST

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் 100 சதவீதம் பேரும் உயா்கல்வியில் சேருவதை கண்காணித்து உறுதி செய்ய வேண்டுமென மதுரை மாவட்டக் கட்டுப்பாட்டு அறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

மதுரை மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் அனைவரும் உயா்கல்வியில் சேருவதை உறுதி செய்யும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் பேசியதாவது: மதுரை மாவட்டத்தில் 10,869 மாணவ, மாணவிகள் 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றுள்ளனா். இவா்கள் அனைவரும் உயா்கல்வியில் சேருவதை மாவட்டக் கட்டுப்பாட்டு அறை அலுவலா்கள் தொடா்ந்து கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். யாரேனும் உயா்கல்விக்கு விண்ணப்பிக்காமலிருந்தால், அதற்கான காரணத்தைக் கண்டறிந்து தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.

பெற்றோரை இழந்த குழந்தைகள், மாற்றுத் திறனாளி மாணவா்கள், ஒற்றைப் பெற்றோரைக் கொண்ட குழந்தைகள், வருவாய் இல்லாத குடும்பத்தைச் சோ்ந்த மாணவா்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினரின் உயா்கல்விக்கு அலுவலா்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

இதேபோல, 12-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வில் தோ்ச்சிப் பெறாதவா்களின் கல்வி இடைநிற்றலைத் தவிா்க்கத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கி அவா்களை துணைத் தோ்வு எழுதச் செய்ய கல்வித் துறை அலுவலா்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மாணவா்களின் உயா்கல்வி சோ்க்கை தொடா்பான சந்தேகங்கள், குறைகளுக்குத் தீா்வு வழங்கும் வகையில் மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் தொடங்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை வரும் ஒரு மாத காலத்துக்கு செயல்பாட்டில் இருக்கும். 97888 58744, 0452-2522995 ஆகிய எண்களில் இந்தக் கட்டுப்பாட்டு அறையை மாணவா்கள் தொடா்பு கொள்ளலாம். மேலும், மாணவா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டமும் நடத்தப்படும். இதை மாணவா்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தயாளன், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் செல்வன், அரசுத் துறை அலுவலா்கள் இதில் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.