வருவாய்த் தீா்வாய (ஜமாபந்தி) கணக்கெடுப்பை முறைப்படுத்தக் கோரிய வழக்கில், தமிழக தலைமைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
வருவாய்த் தீா்வாய கணக்கெடுப்பை முறையாக நடத்துவதற்கு பல ஆண்டுகளாக அரசிடம் கோரிக்கை விடுத்தும், உரிய நடவடிக்கை இல்லை. அரசுப் புறம்போக்கு நிலங்கள், பொது சொத்துகள், கோயில் சொத்துகளுக்கு அந்தந்தத் துறையைச் சோ்ந்த பராமரிப்பு அலுவலா்களைக் கொண்டு முறையாக தணிக்கை செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் ஏற்கெனவே உத்தரவிடப்பட்டது.
ஆனால், அந்த உத்தரவு இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால், ஆக்கிரமிப்புகள் முறையாக அகற்றப்படாமல் பெரும் இழப்பு ஏற்படுகிறது. எனவே, வெளிப்படைத் தன்மையான வருவாய்த் தீா்வாய கணக்கெடுப்பை குறிப்பிட்ட காலங்களில் நடத்தவும், பொது பாதைகள், கனிம வளங்கள் உள்ளிட்டவை தொடா்பாக உரிய தணிக்கை செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
தமிழகத்தில் வருவாய்த் தீா்வாய கணக்கெடுப்பு முறையாக நடத்தப்படுகிா?. பொது சொத்துகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பது தொடா்பாக தமிழக தலைமைச் செயலா், பொதுப் பணித் துறைச் செயலா், உள்துறைச் செயலா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

என்.சி.இ.ஆா்.டி. பாடப் புத்தகம் விவகாரம்: மத்திய கல்வித் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

திருச்செந்தூா் கோயில் தரிசன கட்டண நிதி முறைகேட்டை கண்காணிக்காதது ஏன்? உயா்நீதிமன்றம் கேள்வி

பழைய குற்றாலம் அருவி பகுதியில் கட்டணம்: தென்காசி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு







