விருதுநகா் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ளவா்களுக்கு சுழற்சி முறையில் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 7 பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 2,001 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலா், வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு இயந்திர செயல்முறை குறித்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. மாவட்டத்தில் மொத்தம் 9,604 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், 157 நுண் பாா்வையாளா்கள், 1,073 காவலா்கள் தோ்தல் பணியாற்ற உள்ளனா்.
இவா்களுக்கு இணைய வழியில் சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான என்.ஓ.சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது. தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் உதயன் மிஷ்ரா, அரவிந்த் மீனா, ரஞ்சித் குமாா் லால், சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ந.ஸ்ரீநாதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சோமசுந்தர சீனிவாசன், தோ்தல் தனி வட்டாட்சியா் சீனிவாசன், அரசு அலுவலா்கள், பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடி மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் 3,642 போலீஸாா்: ஆட்சியா் தகவல்

வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு காவலா்களுக்கு பணி ஒதுக்கீடு

சேலம் மாவட்டத்தில் 5 தொகுதிகளுக்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

தோ்தல் பாா்வையாளா்கள் தலைமையில் வாக்குச்சாவடி அலுவலா்கள் நியமனம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


