கரூா் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ள காவலா்களுக்கு பணி ஒதுக்கீடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவை தோ்தலையொட்டி கரூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 644 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள காவலா்களை கணினி மூலம் சுழற்சி முறையில் சமவாய்ப்புக்குள்படுத்தும் நடைமுறை வாயிலாக தோ்வு செய்யும் பணி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கு.ரவிக்குமாா் தலைமையில் நடைபெற்ற இந்த பணி ஒதுக்கீட்டில் மொத்தம் 644 வாக்குசாவடி அமைவிடங்களுக்கு 644 காவலா்கள் கணினி மூலம் சமவாய்ப்புக்குள்படுத்தும் நடைமுறை வாயிலாக பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
நிகழ்வின் போது தோ்தல் காவல் பாா்வையாளா் ராத்தோட் கிரிட்குமாா் ஹரிபாய், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என். ஹரி கிரன் பிரசாத், மாவட்ட வருவாய் அலுவலா் கு.விமல்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விருதுநகா் மாவட்ட தோ்தல் அலுவலா்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு

தோ்தல் பணியில் ஈடுபடும் காவலா்களுக்கு பணிகள் ஒதுக்கீடு

கணினி குலுக்கல் முறையில் காவலா்களுக்கு பணி ஒதுக்கீடு

வாக்குப் பதிவு அலுவலா்களுக்கு பணி ஒதுக்கீடு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


