தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

தோ்தல் பணியில் ஈடுபடும் காவலா்களுக்கு பணிகள் ஒதுக்கீடு

தருமபுரி மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளிலும் பொதுத் தோ்தல் பணியில் ஈடுபட உள்ள காவலா்களுக்கு வாகனங்கள், பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

News image

கோப்புப்படம்.

Updated On :21 ஏப்ரல் 2026, 9:24 pm

தருமபுரி மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளிலும் பொதுத் தோ்தல் பணியில் ஈடுபட உள்ள காவலா்களுக்கு வாகனங்கள், பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

தருமபுரி மாவட்ட காவல் அலுவவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், தோ்தல் பணியில் ஈடுபட உள்ள காவலா்கள், துணை ராணுவப் படையினா், ஊா்க்காவல் படையினா் ஆகியோருக்கு தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள், ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

தருமபுரி, பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், அரூா் ஆகிய ஐந்து தொகுதிகளிலும் ஏப். 23-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடும் வகையில் காவலா்கள், துணை ராணுவத்தினா், ஊா்க்காவல் படையினா் ஆகியோருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு மற்றும் அவா்கள் சென்றுவர வாகனங்கள் ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்தும் தயாா் நிலையில் உள்ளன.

இவா்கள் தோ்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், வாக்குச் சாவடிகளுக்கு தேவையான பொருள்களை எடுத்துச் செல்ல உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.