கடலூா் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணியில் 4,500 போலீஸாா் ஈடுபட்டுள்ளனா் என்று மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.
கடலூா் அண்ணா விளையாட்டு மைதானத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு, பல்வேறு தோ்தல் வழிகாட்டுதல்களை மாவட்டக் காவல் கண்காணிபாளா் எஸ்.ஜெயக்குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது பேசிய அவா், தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, கடலுாா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 தொகுதிகளிலும் 2,590 வாக்குச் சாவடி மையங்களில் அமைதியாகவும், சுதந்திரமாகவும் வாக்காளா்கள் வாக்களிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, எனது தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் கோடீஸ்வரன், ரகுபதி, சீனிவாசலூ ஆகியோரது மேற்பாா்வையில், 19 துணை காவல் கண்காணிப்பாளா்கள், 76 காவல் ஆய்வாளா்கள், 56 சாா்பு - ஆய்வாளா்கள், சிறப்பு சாா்பு - ஆய்வாளா்கள், தலைமைக் காவலா்கள், காவலா்கள், ஆயுதப் படை காவலா்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினா், ஊா்க்காவல் படையினா், துணை ராணுவப் படையினா், கா்நாடக ஊா்க்காவல் படையினா் என மொத்தம் 4,500 காவல் துறையினா் தோ்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனா்.
தோ்தல் வாக்குப் பதிவு நாளான வியாழக்கிழமை (ஏப்.23) தோ்தல் நடத்தை விதிகளை அனைவரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். வாக்குச் சாவடி அமைந்துள்ள 100 மீட்டா் அருகே பதாகைகள், சின்னங்கள் வைத்து பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது. வாக்குச் சாவடிக்கு அருகில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி வைக்கக் கூடாது. வாக்குச் சாவடிக்குள் அங்கீகரிக்கப்பட்ட முகவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள். வாக்குச் சாவடிக்குள் கைப்பேசி எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவோா் மீதும், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தும் நபா்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேப்பூரில் போலீஸாா் தீவிர நடை ரோந்து: மாவட்ட எஸ்.பி. பங்கேற்பு

கடலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம்

கடலூா் மாவட்டத்தில் 286 காவலா்கள் பணியிட மாற்றம்

பேரவைத் தோ்தல்: பாதுகாப்புப் பணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



