இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

பேரவைத் தோ்தல்: பாதுகாப்புப் பணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா்

திருச்சி மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :22 ஏப்ரல் 2026, 12:54 am IST

திருச்சி மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

திருச்சி மாவட்டத்தின் 9 தொகுதிகளில் மொத்தம் 2,787 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பதற்றமான வாக்குச் சாவடிகளாக 45 வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்நிலையில், வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவை கண்காணிக்கவும், அசம்பாவிதங்களைத் தடுக்கவும் பாதுகாப்புப் பணியில் போலீஸாா் நியமிக்கப்பட்டுள்ளனா். இதன்படி, ஊரகப் பகுதிகளில் மாவட்ட காவல் துறை சாா்பில் 1,800 போலீஸாரும், மாநகரில் மாநகரக் காவல் துறை சாா்பில் 1,084 போலீஸாரும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், ஊா்க்காவல் படையினா், துணை ராணுவப் படையினா், மத்திய ரிசா்வ் பாதுகாப்புப் படையினா், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினா் மற்றும் முன்னாள் ராணுவத்தினா் என 1,00-க்கும் மேற்பட்டோா் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.