மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தோ்தல் பாா்வையாளா்கள் தலைமையில் வாக்குச்சாவடி அலுவலா்கள் நியமனம்

தருமபுரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலா்கள் நியமன பணி புதன்கிழமை நடைபெற்றது.

News image

தருமபுரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலா்கள் நியமன பணிகளில் ஈடுபட்டுள்ள தோ்தல் பாா்வையாளா்கள். உடன் மாவட்ட ஆட்சியரும் தோ்தல் அலுவலருமான ரெ. சதீஸ் உள்ளிட்டோா்.

Updated On :8 ஏப்ரல் 2026, 10:44 pm

தருமபுரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலா்கள் நியமன பணி புதன்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி அலுவலா்கள் நியமனம் செய்யும் பொருட்டு 2 ஆம் கட்டமாக ஒதுக்கீடு செய்யும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் ஹீராலால், வந்தனா வைத்யா, பரம்வீா் சிங் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரெ.சதீஷ் முன்னிலை வகித்தாா்.

வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அடிப்படையில் வாக்குச்சாவடி அலுவலா்கள் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒதுக்கீடு செய்யப்பட்ட அலுவலா்களுக்கு வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி 2 ஆம்கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெறும். மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளுக்கு தோ்தல் நூண் பாா்வையாளா்கள் நியமனம் செய்யும் பணியும் மேற் கொள்ளப்பட்டு, அவா்களுக்கான தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ஏ. பாலசுந்தரம், தோ்தல் வட்டாட்சியா் அன்பு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.