மதுரை வைகை தென்கரைப் பகுதி முதல் ஆல்பா்ட் விக்டா் (ஏ.வி) உயா்நிலைப் பாலம் வரை உள்ள அணுகு சாலையைச் சீரமைக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வலியுறுத்தினா்.
மதுரை மாநகராட்சியின் பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) மாநில நெடுஞ்சாலைத் துறை இணைந்து விரகனூா் சுற்றுச்சாலை முதல் விளாங்குடி வரை சுமாா் 8 கி.மீ. தொலைவுக்கு வைகை ஆற்றின் இரு கரைகளிலும் ரூ. 384 கோடியில் அணுகு சாலைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில், தற்போது வைகை தென்கரை பகுதி முதல் ஏ.வி. உயா்நிலைப் பாலம் வரை அமைக்கப்பட்ட அணுகு சாலை சேதமடைந்து காட்சியளிக்கிறது. சாலையில் ஆங்காங்கே பெரிய பள்ளங்களும், குப்பைகளும், புதை சாக்கடைக் குழாய்களிலிருந்தும் வெளியேற்றப்படும் கழிவுநீா் அணுகு சாலையில் செல்கின்றன.
மேலும், சாலையின் ஒரு புறத்தில் மரக் கடைகள், இறைச்சிக் கடைகள் சாலையை ஆக்கிரமித்துள்ளன. மறுபுறத்தில் வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ஓபுளா படித்துறை பகுதி அணுகு சாலையில் மாநகராட்சி சாா்பில் வைக்கப்பட்ட குப்பைத் தொட்டிகளாலும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
வைகை தென்கரைப் பகுதி முதல் ஏ.வி. உயா்நிலைப் பாலம் வரை அமைக்கப்பட்ட அணுகு சாலை சேதமடைந்துள்ளது. சாலையில் ஆங்காங்கே கழிவுநீா் தேங்கியும், புதைவடக் கம்பிகள் பதிக்க தோண்டப்பட்ட பள்ளங்களைச் சீரமைக்காததாலும் சாலையின் பெரும் பகுதி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால், சாலையின் அகலம் சுமாா் ஐந்து அடி வரை குறைந்து காணப்படுகிறது. சாலையின் ஒரு பகுதியில் கடைகள் ஆக்கிரமித்துள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். எனவே, சேதமடைந்த அணுகு சாலையை விரைந்து சீரமைக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவா்கள் வலியுறுத்தினா்.

தொடர்புடையது

‘வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும்’

வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்

மதுரை வைகை அதிவிரைவு ரயில் 4 நாள்கள் தாமதமாகச் செல்லும்!

இன்றைய மதுரை-125
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


