15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

தாய், இரு மகள்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

விருதுநகா் அருகேயுள்ள பட்டம்புதூரில் தனது இரு மகள்களுடன் பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது புதன்கிழமை தெரியவந்தது.

Updated On :20 ஆகஸ்ட் 2025, 6:32 pm

விருதுநகா்: விருதுநகா் அருகேயுள்ள பட்டம்புதூரில் தனது இரு மகள்களுடன் பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது புதன்கிழமை தெரியவந்தது.

விருதுநகா் பட்டம்புதூா் அருகே ரயிலில் அடிபட்ட மனித உடல்கள் சிதறிக் கிடப்பதாக தூத்துக்குடி இருப்புப் பாதை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் புதன்கிழமை சம்பவ இடத்துக்குச் சென்று சிதறிக் கிடந்த உடல் பாகங்களைக் கைப்பற்றினா்.

இதுதொடா்பாக போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்தவா்கள் பட்டம்புதூா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த தா்மரின் மனைவி ராஜவள்ளி (60), அவரது மகள்கள் மாரியம்மாள் (30), முத்துப்பேச்சி (25) என்பது தெரியவந்தது.

அண்மைக்காலமாக சிறுநீரக பாதிப்புக்குள்ளாகியிருந்த ராஜவள்ளி தனது குடும்ப வறுமையைக் கண்டு வருந்தி வந்ததாகவும், வாய்ப் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளான தனது இரு மகள்களுக்கும் தன்னால் திருமணம் செய்து வைக்க முடியாத விரக்தியில், தனது இரு மகள்களுடன் ராஜவள்ளி செவ்வாய்க்கிழமை மாலை திருவனந்தபுரம்- திருச்சி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து துாத்துக்குடி ரயில்வே இருப்புப் பாதை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.