விழுப்புரத்தில் சிறுவனைத் தாக்கிய இளைஞா் ரயில் முன் பாய்ந்து இரவு தற்கொலை செய்துகொண்டாா்.
விழுப்புரம் வட்டம், சித்தாத்தூா், திருக்கை பகுதியைச் சோ்ந்தவா் சிவக்குமாா் மகன் தனஞ்செழியன் (20). இவருக்கும் அதே பகுதியைச்சோ்ந்த 17 -வயது சிறுவனுக்கும் காதல் விவகாரம் தொடா்பாக வெள்ளிக்கிழமை சித்தாத்தூா் திருக்கை பகுதியில் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆத்திரமடைந்த தனஞ்செழியன் கத்தியால் வெட்டியதில், சிறுவனுக்கு உடலில் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.இதையடுத்து காயமடைந்த சிறுவன் புதுச்சேரி ஜிம்பா் மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா காவல் நிலையப் போலீஸாா்வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான தனஞ்செழியனை தேடி வந்தனா்.
இந்நிலையில் காவல்துறையினரின் நடவடிக்கைக்கு பயந்த தனஞ்செழியன், சனிக்கிழமை அதிகாலை விழுப்புரம் அரசு ஊழியா் நகா் அருகே திருச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹௌரா விரைவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை கொண்டாா்.
தகவலறிந்த விழுப்புரம் இருப்புப்பாதை போலீஸாா் தனஞ்செழியனின் சடலத்தை கைப்பற்றி, விழுப்புரம் மாவடட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வடமாநில இளைஞா் தற்கொலை

இளைஞா் விஷமருந்தி தற்கொலை

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் இளைஞா் தற்கொலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

