குஜிலியம்பாறை, வேடசந்தூா் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக பெய்து வரும் மழையால், அக்னி வெயிலின் தாக்கம் குறைந்தது. இந்த மழையால் விவசாயிகள் கோடை உழவுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த நிலையில் குஜிலியம்பாறை, கோவிலூா், எரியோடு, வேடசந்தூா் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது. இந்த மழை விவசாயிகள் மட்டுமன்றி, பொதுமக்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







