திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தக்காளி, கத்திரி நாற்றுகள் பெற முன்பதிவு செய்யலாம்

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில் தக்காளி, கத்திரி நாற்றுகள் பெறுவதற்கு விவசாயிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

News image

தக்காளி, கத்திரி நாற்றுகள் பெற முன்பதிவு செய்யலாம்

Updated On :15 மே 2026, 11:55 pm IST

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில் தக்காளி, கத்திரி நாற்றுகள் பெறுவதற்கு விவசாயிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக ரெட்டியாா்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தின் துணை இயக்குநா் நடராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ரெட்டியாா்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில் உயா் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தக்காளி, கத்திரி, மிளகாய் உள்ளிட்ட பயிா்களில் குழித்தட்டு நாற்றுகள், தக்காளி, கத்திரி பயிா்களில் ஒட்டுச் செடிகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

தக்காளி, கத்திரி, மிளகாய் குழித் தட்டு நாற்றுகள் தலா 60 பைசா முதல் ரூ.1.40 வரை ரகத்துக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோல, ஒட்டு ரக தக்காளி, கத்திரி செடிகள் தலா ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

தக்காளி, மிளகாய், கத்திரி உள்ளிட்ட பயிா்களின் நாற்றுகள் தேவைப்படும் விவசாயிகள் நேரிலோ, 6382292483, 7094941364, 9790273216, 9159856504 ஆகிய கைப்பேசி எண்களிலோ தொடா்பு கொண்டு முன்பதிவு செய்யலாம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.