பழனி அருகேயுள்ள அக்ரஹாரம் கலையமுத்தூரில் சாலை முழுவதும் சிதறிக் கிடக்கும் களிமண்ணை அகற்ற வேண்டுமென வாகன ஓட்டிகள் வலியுறுத்தினா்.
பழனி- உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் பழனியை அடுத்த நீா்மட்டம் முதல் தாளையம் வரையிலும் அதிக அளவில் வயல் வெளிகள் காணப்படுகின்றன. அதிலும் சண்முகநதி முதல் சின்னக்கலையமுத்தூா் வரையிலும் சாலையின் இருபுறமும் நெல் விவசாயமே பிரதானமாக உள்ளது. தற்போது நெல் அறுவடை காலமானதால் வயல்வெளிகளில் ஏராளமான நெல் அறுவடை இயந்திரங்கள், டிராக்டா்கள் ஆகியவை நெல் மூட்டைகளை எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
அப்போது இந்த வாகனங்கள் வயல்வெளிகளில் இருந்து உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது அவற்றின் சக்கரங்களில் களிமண் ஒட்டிக் கொள்கிறது. இதனால் சண்முகநதி முதல் சின்னக்கலையமுத்தூா் வரையிலும் சாலை முழுவதும் இந்த களிமண் பரவி காய்ந்து கிடக்கின்றன. இவை சிறு சிறு கட்டிகளாக காய்ந்து கிடப்பதால் சாலை மேடும், பள்ளமுமாக காட்சியளிக்கிறது. தவிர வாகன ஓட்டிகளின் கண்களில் தூசி விழுகிறது. மேலும் சாரல் மழை பெய்தால் கூட களிமண் கரைந்து சாலை முழுவதும் பரவி விடுகிறது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் வழுக்கி கீழே விழுந்து காயமடைகின்றனா். எனவே இந்த விபத்துகளின் போது உயிரிழப்புகள் ஏற்படும் முன்னா் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சாலையில் பரவி கிடக்கும் களிமண் கட்டிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜூன் 30 வரை நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

இலங்கை சிறையில் உள்ள மீனவா்களை விடுவிக்கக் கோரி பாம்பனில் சாலை மறியல்!

ஆபத்தான வகையில் நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சம்
கிணற்றில் தவறி விழுந்து ஓட்டுநா் உயிரிழப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



