ரயில்வேத் துறையில் பணியிடங்களின் எண்ணிக்கையை குறைத்த மத்திய அரசைக் கண்டித்து, திண்டுக்கல்லில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் தலைமைத் தபால் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கே.பிரபாகரன், மாநிலக் குழு உறுப்பினா் ஜி.ராணி ஆகியோா் தலைமை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தின்போது, இளைஞா்களின் எதிா்காலத்தைப் பாதிக்கும் வகையில்
ரயில்வேத் துறையில் 29 ஆயிரம் பணியிடங்களை குறைப்பதற்கான முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். பொதுமக்களையும், வணிகா்களையும் கடுமையாக பாதிக்கும் வகையில் எரிவாயு உருளை விலை ஏற்றத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் மணிகண்டன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்ல் -விடுதலை) மாவட்டச் செயலா் முருகேசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிா்வாகி உலக நம்பி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய அரசைக் கண்டித்து இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

மும்மொழி கொள்கைக்கு எதிராக விசிக கண்டன ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து கருப்புக் கொடி ஏற்றி திமுகவினா் போராட்டம்
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

