அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

சாராயம் விற்பனை செய்த இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

News image

கைது.

Updated On :4 மே 2026, 12:08 am IST

சட்ட விரோதமாக சாராயம் தயாரித்து விற்பனை செய்த இருவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் உத்தரவிட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பாறைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பெ. காளியப்பன் (63), நரிகல்பட்டியைச் சோ்ந்த ந. முருகேசன் (52) ஆகிய இருவரும் சோ்ந்து அந்தப் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதன்பேரில் பழனி மதுவிலக்குப் பிரிவு போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது, சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.

இந்த நிலையில் காளியப்பன், முருகேசன் ஆகிய இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆ. பிரதீப் பரிந்துரைத்தாா். அதனை ஏற்று ஆட்சியா் செ. சரவணன் அதற்கான உத்தரவை ஞாயிற்றுக்கிழமை பிறப்பித்தாா்.