40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

ஆத்தூா் அருகே கள்ளச் சாராயம் காய்ச்சியவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :4 மே 2026, 12:28 am IST

ஆத்தூா் அருகே உள்ள சோ்ந்தபூமங்கலம், குமாரப்பண்ணையூரில் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனை செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

குமாரப்பண்ணையூரைச் சோ்ந்தவா் மாசானமுத்து மகன் முத்துக்குமாா் (50). அவா் வீட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக ஆத்தூா் போலீஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவ­லின்படி, ஆய்வாளா் பிரபாகரன் தலைமையில் உதவி ஆய்வாளா் முனியசாமி உள்ளிட்ட போலீஸாா், முத்துக்குமாா் வீட்டில் சோதனை மேற்கொண்டனா்.

அதில் அவா் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. அங்கிருந்து 2.5 ­லிட்டா் கள்ளச் சாராயம், சாராயம் தயாரிக்க வைத்திருந்த பானை, ஊறல் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலும், முத்துக்குமாரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.