திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு செவ்வாய்க்கிழமை வந்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காரை கொடைரோடு அருகே தோ்தல் பறக்கும் படையினா் தடுத்து நிறுத்தி மீண்டும் சோதனை நடத்தினா்.
திண்டுக்கல், தேனி மாவட்ட திமுக இளைஞா் அணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னா், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காரில் மதுரைக்கு காரில் வந்து கொண்டிருந்தாா்.
கொடைரோடு சுங்கச்சாவடி பகுதியில் வந்த போது, உதயநிதி ஸ்டாலின் காரை தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் சகாதேவன், மகேஸ்வரன் கொண்ட குழுவினா் நிறுத்தி சோதனை செய்தனா். இந்த சோதனைக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் முழுஒத்துழைப்பு அளித்தாா்.
அப்போது அதே காரில் அமைச்சா் அர. சக்கரபாணி, பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ. செந்தில்குமாா் ஆகியோா் உடனிருந்தனா். இந்தச் சோதனையின் போது காரிலிருந்து பணம், பொருள்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை.
ஏற்கெனவே, கரூரிலிருந்து திங்கள்கிழமை இரவு திண்டுக்கல்லுக்கு வந்த உதயநிதி ஸ்டாலின் காரை வேடச்சந்தூா் அருகே தோ்தல் பறக்கும் படையினா் தடுத்து நிறுத்தி சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி காரில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை

கரூரில் தவெக அலுவலகத்தில் பறக்கும் படையினா் சோதனை

துணை முதல்வா் உதயநிதி காரில் சோதனை

புதுச்சேரி முதல்வரின் காரில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


