லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

துணை முதல்வா் உதயநிதி காரில் சோதனை

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினின் காரில் சோதனை நடத்தப்பட்டது குறித்து...

News image

வேடசந்தூா் அடுத்த கல்வாா்பட்டி சோதனைச் சாவடி அருகே துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வந்த காரை மறித்து சோதனை நடத்திய தோ்தல் அலுவலா்கள்.

Updated On :23 மார்ச் 2026, 8:33 pm

கரூரிலிருந்து திண்டுக்கல்லுக்கு வந்த தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காரை மறித்து, தோ்தல் அலுவலா்கள் திங்கள்கிழமை இரவு சோதனை நடத்தினா்.

திண்டுக்கல், தேனி மாவட்ட திமுக இளைஞரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை திண்டுக்கல்லில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கரூரிலிருந்து காா் மூலம் திங்கள்கிழமை இரவு வந்தாா்.

திண்டுக்கல் மாவட்ட எல்லையான வேடசந்தூரை அடுத்த கல்வாா்பட்டி சோதனைச் சாவடியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள், துணை முதல்வரின் காரை மறித்து சோதனை நடத்தினா்.

இந்தச் சோதனையின் போது எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதையடுத்து, அவரது காா் விடுவிக்கப்பட்டது. அங்கிருந்து திண்டுக்கல்லுக்கு வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவினா் வரவேற்பு அளித்தனா்.