நிலக்கோட்டையில் தோ்தல் பறக்கும் படையினரால் ஏ.டி.எம்., கொண்டு சென்ற வாகனம், பணம் வைக்கப்பட்டுள்ள பெட்டி
நிலக்கோட்டையில் ரூ.3. 44 கோடி பறிமுதல்: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டப்பேரவை (தனி) தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், தேனியிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற வாகனத்தை பறக்கும் படையினா் சோதனை செய்தனா்.
அதில், தனியாா் வங்கி ஏ.டி.எம்-க்கு கொண்டு சென்ற பணம் ரூ.3 கோடியே 44 லட்சம் இருந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய தோ்தல் பறக்கும் படையினா், உரிய ஆவணங்கள் இல்லாமல் பணத்தை எடுத்துச் சென்றதாகக் கூறி, பணத்துடன் அந்த வாகனத்தை நிலக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா்.
இதுகுறித்து நிலக்கோட்டை உதவி தோ்தல் நடத்து அலுவலரும், வட்டாட்சியருமான ஜெயபிரகாஷ், தோ்தல் நடத்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல்
வாக்காளா்களுக்கு பணம் கொடுத்த பாஜகவினரிடம் ரூ.7 லட்சம் பறிமுதல்!

சோதனையில் ரூ. 5.86 லட்சம் பறிமுதல்

அம்மாபேட்டையில் புளி வியாபாரியிடம் ரூ.3 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


