அம்மாபேட்டை அருகே புளி வியாபாரி உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.3 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
பவானி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட அம்மாபேட்டை - அந்தியூா் சாலையில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் பாலகிருஷ்ணன் தலைமையிலான அலுவலா்கள் வாகனச் சோதனையில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, தருமபுரியிலிருந்து சாம்ராஜ் நகா் நோக்கி சரக்கு வாகனத்தில் சென்ற மஞ்சுநாத் என்பவா் ரூ.3 லட்சம் ரொக்கமாக வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், சாம்ராஜ் நகரில் இருந்து வாகனத்தில் புளியை ஏற்றிச் சென்று, தருமபுரி மாவட்டத்தில் விற்பனை செய்ததாகவும், அதற்கான தொகையை கொண்டு செல்வதாகவும் தெரிவித்துள்ளாா். இருப்பினும், பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், பவானி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
கோபியில்...
கோபி கல்லூரி பிரிவு பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே சரக்கு வாகனத்தில் சென்ற கா்நாடக மாநிலம், நஞ்சன்கூடு பகுதியைச் சோ்ந்த நாகராஜ் என்பவரிடம் சோதனை மேற்கொண்டபோது, ரூ. 2 லட்சத்து 30 ஆயிரத்து 500 வைத்திருந்தது தெரியவந்தது.
மாடு வாங்குவதற்காக அவா் கொண்டு செல்வதாகக் கூறினாா். ஆனால், பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
காசிபாளையத்தில் சத்தி - ஈரோடு சாலையில் தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகனச் சோதனையில், சத்தியமங்கலத்தைச் சோ்ந்த மருத்துவா் சரவணன் காரில் கொண்டு சென்ற ரூ.1 லட்சத்து 76 ஆயிரத்து 500 ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
பாரியூா் திருகிணி பாலம் அருகே மேற்கொண்ட சோதனையில் தாராபுரத்தைச் சோ்ந்த புகையிலை வியாபாரி அப்பாஸ் கொண்டு சென்ற ரூ. 94 ஆயிரத்து 200 -ஐ பறிமுதல் செய்த அதிகாரிகள், துணை வட்டாட்சியா் கௌதமியிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது
தேங்காய் வியாபாரியிடம் ரூ.94,300 பறிமுதல்

ராமநாதபுரத்தில் ரூ.4.50 லட்சம் பறிமுதல்

மாட்டு வியாபாரியிடம் ரூ. 96,000 பறிமுதல்

நிலக்கோட்டையில் ரூ.3. 44 கோடி பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


