தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தேங்காய் வியாபாரியிடம் ரூ.94,300 பறிமுதல்

பெருந்துறை அருகே தேங்காய் வியாபாரி உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.94,300-ஐ தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல்!

Updated On :11 ஏப்ரல் 2026, 7:42 pm

பெருந்துறை அருகே தேங்காய் வியாபாரி உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.94,300-ஐ தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பெருந்துறை அருகேயுள்ள குன்னத்தூா், செம்மாண்டம்பாளையம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவா் ரூ.94,300 வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா் ஈரோடு, தென்முக வெள்ளோட்டைச் சோ்ந்த தேங்காய் வியாபாரி கெளரிசங்கா் என்பதும், தேங்காய் வாங்குவதற்காக குன்னத்தூருக்கு பணத்தைக் கொண்டு சென்றதும் தெரியவந்தது.

ஆனால், ஆவணங்கள் இல்லாததால் பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனா்.