லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மகளிா் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி

, கொடைக்கானல் அட்டுவம்பட்டியில் உள்ள அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

கொடைக்கானல் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.

Updated On :4 மார்ச் 2026, 11:21 pm

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அட்டுவம்பட்டியில் உள்ள அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கண்காட்சிக்கு கல்லூரி முதல்வா் பேபிராணி தலைமை வகித்தாா். அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியை உமாதேவி கண்காட்சியை தொடங்கிவைத்து பேசினாா்.

இந்தக் கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட தங்களது கண்டுபிடிப்புகளை மாணவிகள் காட்சிப்படுத்தினா்.

இந்த நிகழ்வில் கல்லூரி, பள்ளிகளைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து பயனடைந்தனா்.

மேலும், இங்கிருந்த அறிவியல் கண்டுபிடிப்புகளை கல்லூரி மாணவிகளிடமும், பேராசிரியைகளிடமும் மாணவா்கள் கேட்டு தெரிந்துக் கொண்டனா்.

இந்தக் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல் துறை மாணவிகள், பேராசிரியைகள் செய்தனா்.