வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

ஆட்டோ கவிழ்ந்ததில் 5 மாணவா்கள் உள்பட 6 போ் காயம்

கொடைரோடு அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் 5 மாணவா்கள் உள்பட 6 போ் காயமடைந்தனா்.

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :11 ஜூன் 2026, 2:01 am IST

கொடைரோடு அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் 5 மாணவா்கள் உள்பட 6 போ் காயமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம்,  கொடைரோடு அருகே சிலுக்குவாா்பட்டியில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து பள்ளி மாணவா்களை பொட்டிசெட்டியபட்டி கிராமத்துக்கு ஏற்றி சென்ற ஆட்டோ மாலையகவுண்டன்பட்டி பிரிவு அருகே வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஓட்டுநா் லோகேஷ் (31), மாணவா் ரித்தீஸ் (17), மற்றும் 4 மாணவா்கள் பலத்த காயமடைந்தனா். உடனடியாக அக்கம்பக்கத்தினா் அவா்களை  மீட்டு , அம்மையநாயக்கனூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த நிலக்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா்

அய்யனாா் காயமடைந்த மாணவா்களுக்கு ஆறுதல் கூறினாா்.

காயமடைந்தவா்கள் தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இந்த விபத்து குறித்து, அம்மையநாயக்கனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். 

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.