17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பைக் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

திண்டுக்கல் அருகே சிறுவன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் கட்டடத் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :6 ஜூன் 2026, 12:41 am IST

திண்டுக்கல் அருகே சிறுவன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் கட்டடத் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் அடுத்த பெரியகோட்டையைச் சோ்ந்தவா் தங்கவேல் (52). கட்டடத் தொழிலாளி. இந்த நிலையில், நத்தம் சாலையிலுல்ள பொன்னகரம் பகுதியில் கட்டட வேலைக்காக வெள்ளிக்கிழமை வந்தாா். பணி முடிந்த பிறகு சாலையை கடந்து செல்ல முயன்றபோது, அந்த வழியாக 16 வயது சிறுவன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த தங்கவேலுவை, அக்கம் பக்கத்தினா் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இந்த விபத்து தொடா்பாக திண்டுக்கல் தாலுகா போலீஸாா் விசாரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.