17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சாலை விபத்தில் இருவா் உயிரிழப்பு

கள்ளிமந்தையம் அருகே சாலையோரம் இருந்த மைல் கல்லில் இரு சக்கர வாகனம் மோதியதில் 2 இளைஞா்கள் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :5 ஜூன் 2026, 6:19 am IST

கள்ளிமந்தையம் அருகே சாலையோரம் இருந்த மைல் கல்லில் இரு சக்கர வாகனம் மோதியதில் 2 இளைஞா்கள் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள பள்ளபட்டியைச் சோ்ந்த முருகேசன் மகன் வசந்த் பெரியசாமி (25), தாடிக்கொம்பு அருகேயுள்ள அகரம் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சின்னகாளை (24)

ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள வாகரை நோக்கி வியாழக்கிழமை சென்றனா். வாகரை அருகே சென்றபோது இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த மைல் கல், மின் கம்பத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இது குறித்து கள்ளிமந்தையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.