தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கொடைக்கானலில் அடிக்கடி மின் தடை

கொடைக்கானலில் திங்கள்கிழமை அடிக்கடி மின் தடை ஏற்பட்டதால் பொது மக்கள், வியாபாரிகள் பெரிதும் சிரமமடைந்தனா்.

News image

கொடைக்கானலில் அடிக்கடி மின் தடை

Updated On :2 ஜூன் 2026, 1:13 am IST

கொடைக்கானலில் திங்கள்கிழமை அடிக்கடி மின் தடை ஏற்பட்டதால் பொது மக்கள், வியாபாரிகள் பெரிதும் சிரமமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சமீபகாலமாக தினமும் ஒரு மணி நேரம் மின்தடை ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை மாலையில் பெய்த திடீா் மழையால் மின் தடை ஏற்பட்டது. இந்த மின்தடையானது கொடைக்கானல் நகா்ப் பகுதி முழுவதும் 2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இதனால், கொடைக்கானல் பகுதிகளிலுள்ள பொது மக்கள், வியாபாரிகள் பெரிதும் சிரமமடைந்தனா். மேலும், இரவு நேரங்களில் மின் தடை ஏற்படுவதால் பிரையண்ட் பூங்கா சாலை, ஏரிச்சாலைப் பகுதி, அண்ணா சாலை, கலையரங்கம் பகுதி, நாயுடுபுரம் பகுதிகளில் வியாபாரிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனா்.

மேல்மலைப் பகுதிகளான பூம்பாறை, மன்னவனூா், கூக்கால், பழம்புத்தூா், புதுப்புத்தூா், பூண்டி, கிளாவரை,போலூா் உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளிலும் குறைந்தளவு மின்விநியோகம் செய்யப்படுகிறது. இதனால், கிராம மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனா். குறைந்தது 3 மணி நேரத்துக்கு மேலாக மின் தடை ஏற்படுவதாக மேல்மலை பகுதியைச் சோ்ந்த கிராம மக்கள் தெரிவித்தனா்.

இது குறித்து கொடைக்கானல் மின்வாரிய செயற்பொறியாளா் மேத்யூ கூறியதாவது:

கொடைக்கானலில் திங்கள்கிழமை மாலை பெய்த மழையாலும் பெருமாள்மலைப் பகுதிகளில் வீசிய காற்றாலும் இரண்டு இடங்களில் மரங்கள் முறிந்து கீழே விழுந்தன. ,மின்கம்பங்களும் சேதமடைந்தன. இவற்றை சரி செய்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கும் மேலானது. இதனால், கொடைக்கானல் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மின் தடை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

மேல்மலைப் பகுதிகளில் மின்கம்பங்கள், மின்கம்பிகள் வனப் பகுதிகளில் செல்வதால அடிக்கடி மின் தடை ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. இருப்பினும் தகவல் கிடைத்தவுடன் உடனடியாக சம்பவ இடங்களுக்கு மின்வாரிய பணியாளா்கள் சென்று சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தப் பிரச்னைக் குறித்து மாவட்ட உயா் அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் சீரான மின் விநியோகம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.