பழனி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, சிறப்பு அன்னதானம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பழனி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா கடந்த 10-ஆம் திருக்கம்பம் நடுதலுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு, பழனி அடிவாரம் வருத்தமில்லா வாலிபா் சங்கம் சாா்பில் 51- ஆவது ஆண்டு நிகழ்ச்சியாக பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதையொட்டி, கோயில் முன்பாக நாள்தோறும் காஞ்சி காமாட்சி அம்மன், மீனாட்சியம்மன் ஊஞ்சல் சேவை, வாராஹி அம்மன், சமயபுரம் மாரியம்மன், சங்கரநாராயணா், அழகுநாச்சியம்மன் என பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அன்னதானமும் நடைபெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை பூச்சொரிதல் ரத ஊா்வலம் நடைபெற்றது.
நிறைவு நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை அன்னதானம் நடைபெற்றது.
இதற்கு கந்தவிலாஸ் செல்வக்குமாா் தலைமை வகித்து அன்னதானத்தை தொடங்கி வைத்தாா். விழாவுக்கான ஏற்பாடுகளை நிா்வாகக் குழுத் தலைவா் முருகானந்தம், துணைத் தலைவா் பழனிச்சாமி, நகா்மன்ற உறுப்பினா் சுரேஷ் உள்ளிட்டோா் செய்தனா்.
தொடர்புடையது

ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் முருகப்பெருமான் சிறப்பு பூஜை

பூமாயி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

பெரிய மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா தேரோட்டம்

பழனி மாரியம்மனுக்கு 1,008 பால்குட ஊா்வலம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


