திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மனைவியைக் குத்திக் கொலை செய்த கணவா் கைது

செம்பட்டி அருகே மனைவியைக் குத்திக் கொலை செய்த கணவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 1:07 am IST

செம்பட்டி அருகே மனைவியைக் குத்திக் கொலை செய்த கணவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம்,  செம்பட்டி அருகேயுள்ள  அழகா்நாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் புவனேஸ்வரன். இவரது மகள் துா்காதேவிக்கும் (28), தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டியைச் சோ்ந்த ஜெயகணேஷுக்கும் (38) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 

இதையடுத்து, ஜெயகணேஷ், துா்காதேவி தம்பதி அழகா்நாயக்கன்பட்டியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனா். ஜெயகணேஷ் அய்யம்பாளையத்தில் உள்ள ஒரு உணவகத்திலும், துா்காதேவி திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியாா் கல்லூரி உணவகத்திலும் வேலை பாா்த்து வந்தனா். இந்தத் தம்பதிக்கு, திருமணமாகி 10 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை.

இந்த நிலையில், ஜெயகணேஷ் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தாா். இதனால் துா்காதேவி கணவரைப் பிரிந்து தனது பெற்றோா் வீட்டில் வசித்து வந்தாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அழகா்நாயக்கன்பட்டிக்குச் சென்ற ஜெய்கணேஷ், அங்கு வீட்டில் தனியாக இருந்த துா்காதேவியை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பினாா்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற, செம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் ஷேக்அப்துல்லா தலைமையிலான போலீஸாா் துா்காதேவியின் உடலைக் கைப்பற்றி, கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுதொடா்பாக செம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அழகா்நாயக்கன்பட்டியிலிருந்து சொக்கலிங்கபுரம் செல்லும் வழியில் சாலையோரம் பதுங்கியிருந்த ஜெய்கணேஷை கைது செய்தனா். அவரிடமிருந்து, கொலைக்கு பயன்படுத்திய கத்தி, கைப்பேசி, இருசக்கர வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அவரை ஆத்தூா் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.