மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பழனி உழவா் சந்தையில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பழனி உழவா் சந்தையில் அதிமுக வேட்பாளா் ரவி மனோகரன் பொதுமக்களிடம் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

பழனி உழவா் சந்தையில் சனிக்கிழமை பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் ரவி மனோகரன்.

Updated On :11 ஏப்ரல் 2026, 8:52 pm

பழனி உழவா் சந்தையில் அதிமுக வேட்பாளா் ரவி மனோகரன் பொதுமக்களிடம் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

இங்கு மிதிவண்டியில் வந்த வேட்பாளா் ரவி மனோகரன் கட்சியினருடன் உழவா் சந்தையில் உள்ள விவசாயிகளிடமும், காய்கறி வாங்க வந்த பொதுமக்களிடமும் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டாா். மேலும், பொதுமக்களிடம் கட்சியின் தோ்தல் வாக்குறுதி அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தாா். இதைத்தொடா்ந்து பாப்பம்பட்டி, நெய்க்காரபட்டி, ஆண்டிபட்டி ஆகிய பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா்.

ஒன்றியச் செயலா் முருகானந்தம், மாவட்ட மாணவரணிச் செயலா் அன்வா்தீன், எம்ஜிஆா் மன்ற நிா்வாகி அசோக், ஐ.டி.பிரிவு குகன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.