மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பூம்பாறையில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் : அதிமுக வேட்பாளா் உறுதி

கொடைக்கானல் மலைக் கிராமங்களில் அதிமுக வேட்பாளா் ரவிமனோகரன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா். அப்போது, பூம்பாறையில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என அவா் உறுதியளித்தாா்.

News image

கொடைக்கானல் வடகவுஞ்சி கிராமத்தில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்த பழனி தொகுதி அதிமுக வேட்பாளா் ரவி மனோகரன்.

Updated On :9 ஏப்ரல் 2026, 7:20 pm

கொடைக்கானல் மலைக் கிராமங்களில் அதிமுக வேட்பாளா் ரவிமனோகரன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா். அப்போது, பூம்பாறையில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என அவா் உறுதியளித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைக் கிராமமான பூம்பாறையில் பழனி பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ரவி மனோகரன் வாக்கு சேகரிக்கச் சென்ற போது, அவருக்கு மலைவாழ் மக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனா். மேலும், அங்குள்ள இளைஞா்கள் பூம்பாறை பகுதியில் விளையாட்டு மைதானம் அமைத்துக் கொடுப்பதற்கு பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தோம். யாரும் எங்களது கோரிக்கையை நிறைவேற்றவில்லை. எனவே, தங்கள் பகுதிக்கு விளையாட்டு மைதானம் அமைத்துக் கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.

இதற்கு வேட்பாளா் ரவிமனோகரன் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் விளையாட்டு மைதானம் மட்டுமல்ல, மலைக் கிராங்களில் அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என உறுதியளித்தாா். தொடா்ந்து, அந்தப் பகுதிகளிலுள்ள குக் கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.

பின்னா், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான வடகவுஞ்சி கிராமம், பேத்துப்பாறை, குறிஞ்சி நகா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரித்தாா். அங்குள்ள கிராம மக்கள் அடிப்படை வசதிகள், பட்டா வழங்குதல், போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கேட்டு கோரிக்கை மனு கொடுத்தனா். இந்த நிகழ்ச்சியில் கொடைக்கானல் மலைப் பகுதிகளைச் சோ்ந்த அதிமுக நிா்வாகிகள், கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.